தமிழ் சினிமா

கஜினிகாந்த் வெளியீட்டு தேதி மாற்றம்: ஆகஸ்ட் 3-ல் வெளியாகிறது

ஸ்கிரீனன்

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் ‘கஜினிகாந்த்’ வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது.

‘ஹர ஹர மஹாதேவகி’ மற்றும் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ ஆகிய படங்களைத் தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கஜினிகாந்த்’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது.

ஆர்யா, சயிஷா சைகல், கருணாகரன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பலே பலே மகாடிவோய்’ படத்தின் தமிழ் ரீமேக்காகும். இதன் அனைத்துப் பணிகளும் முடிவுற்று, தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் பெற்றிருக்கிறது.

ஜூலை 27-ம் தேதி ‘கஜினிகாந்த்’ வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால், தற்போது பல படங்கள் அதே தேதியில் வெளிவருவதால், ஆகஸ்ட் 3-ம் தேதி வெளியீட்டை மாற்றிவிட்டது படக்குழு.

‘கஜினிகாந்த்’ படத்தைத் தொடர்ந்து ஆர்யாவின் அடுத்த படத்தை சந்தோஷ் பி.ஜெயக்குமாரே இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT