தமிழ் சினிமா

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’-க்கு ஜி.வி.பிரகாஷ் இசை!

ஸ்டார்க்கர்

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘குட் பேட் அக்லி’ படம் அறிவிக்கப்பட்டபோது, அதன் இசையமைப்பாளராக இருந்தார் தேவி ஸ்ரீ பிரசாத். பின்பு ‘புஷ்பா 2’ படத்தில் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பாடல்களை மட்டும் தேவிஸ்ரீ பிரசாத் கவனிப்பார் என தகவல்கள் வெளியாகின. பின்னணி இசை பணிகளை முழுமையாக ஜி.வி.பிரகாஷ் கவனிப்பார் என்றார்கள்.

தற்போது ‘குட் பேட் அக்லி’ டீஸர் வெளியீட்டுக்காக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. அதன்படி தேவி ஸ்ரீபிரசாத் முழுமையாக படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இசையமைப்பாளர் என்று ஜி.வி.பிரகாஷ் பெயரை மட்டுமே படக்குழு குறிப்பிட்டுள்ளது. இன்று இரவு 7:03 மணிக்கு டீஸர் வெளியாகவுள்ளது. இதனை தமிழகமெங்கும் உள்ள முக்கிய திரையரங்குகளில் கொண்டாட்டமாக நடைபெறவுள்ளது.

ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. இதில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.

SCROLL FOR NEXT