தமிழ் சினிமா

ரங்கராஜ சக்திவேல் நாயக்கர் நல்லவரா, கெட்டவரா? - கமல் அளித்த பதில்

ஸ்டார்க்கர்

‘தக் லைஃப்’ படத்தில் தனது கதாபாத்திரம் குறித்த கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

சென்னையில் ‘ஃபிக்கி (FICCI) ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வணிக மாநாடு (MEBC)–சவுத் கனெக்ட் 2025’-ஐ தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் மற்றும் இயக்குநர் கமல்ஹாசனுடன் இணைந்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் FICCI ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு (தெற்கு) அமைப்பின் தலைவராக கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கமல் - த்ரிஷா இணைந்து கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். அப்போது “ரங்கராஜ சக்திவேல் நாயக்கர், நல்லவரா கெட்டவரா?” என்று கமலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “நான் திரும்ப மணிரத்னம் சாரை சந்திக்க வேண்டாமா? என்ன சார் கஷ்டப்பட்டு எடிட் எல்லாம் செய்துக் கொண்டிருக்கிறேன். எடிட்டே இல்லாமல் மொத்த கதையையும் தட்டிவிட்டீர்களே என்று கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும். அந்தப் படம் பார்த்தீர்கள் என்றாலும் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்காது. அவர் நல்லதும் கெட்டதும் சேர்ந்தவர் தான்” என்று பதிலளித்தார்.

மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ படத்தில் ரங்கராஜ சக்திவேல் நாயக்கர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கமல். இதில் சிம்பு, த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் கமலுடன் நடித்துள்ளனர். ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளன.

SCROLL FOR NEXT