ரியோ நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆண் பாவம் பொல்லாதது’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.
ரியோ ராஜ் நடித்துள்ள புதிய படத்துக்கு ‘ஆண்பாவம் பொல்லாதது’ எனத் தலைப்பிட்டுள்ளார்கள். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனை லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
’ஆண்பாவம் பொல்லாதது’ படத்தினை எஸ்.சக்திவேல் தயாரித்துள்ளார். இதனை அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார். நாயகியாக மாளவிகா மனோஜ் நடித்துள்ளார். ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கம், இசையமைப்பாளராக சித்து குமார் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். காதலை மையமாக கொண்டு தற்போதைய இளைஞர்களை கவரும் வகையில் இப்படத்தின் திரைக்கதையை வடிவமைத்துள்ளது படக்குழு.
இப்படத்துக்கு முன்னதாக யுவன் தயாரிப்பில் ரியோ நடித்துள்ள ‘ஸ்வீட் ஹார்ட்’ வெளியாகவுள்ளது. மார்ச் 14-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் தமிழக உரிமையினை ஃபைவ் ஸ்டார் செந்தில் கைப்பற்றியுள்ளார்.
Thrilled to launch #APP! Can’t wait to show the madness of #AanpaavamPollathathu —
lets the fun begin!@rio_raj @imalavikamanoj@DrumsticksProd @blacksheepoffl @kalaiyinkural @RjVigneshkanth @Music_Siddhu @ertviji @sheelaActress @dhivakargj @madheshmanickam @Meevinn pic.twitter.com/N815OIhtM3