‘எஸ்.டி.ஆர் 51’ படத்தின் சிம்பு கதாபாத்திர பின்னணி குறித்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து விவரித்துள்ளார்.
‘டிராகன்’ படத்தைத் தொடர்ந்து, சிம்பு நடிக்கும் 51-வது படத்தை இயக்கவுள்ளார் அஸ்வத் மாரிமுத்து. இப்படத்தின் அறிவிப்பு போஸ்டரில் உள்ள சிம்புவின் கதாபாத்திரம் குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகின. இது குறித்து பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.
அதில் அஸ்வத் மாரிமுத்து, “‘God of Love’ என்பது தலைப்பு அல்ல. அது ஒரு கதாபாத்திரம். சிம்பு ரசிகர்கள் எதிர்பார்ப்பதும், சினிமா ரசிகர்கள் எதிர்பார்ப்பதும் கலந்த படம் அது. ஃபேன்டஸி கலந்த கதை அது. அவர் கையில் போட்டிருக்கும் மோதிரம் படத்தில் முக்கியமான ஓர் அங்கம். கொஞ்சம் தீதும் குறைகளும் கொண்டதாகவே சிம்பு கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
‘எஸ்.டி.ஆர் 51’ படத்தையும் ‘டிராகன்’ படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. ‘டிராகன்’ வெளியீட்டுக்குப் பிறகு சிம்பு உடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெறவுள்ளது. இப்படம் 2026-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.