ஜப்பானில் '3 இடியட்ஸ்' படத்தைத் தொடர்ந்து அதிக வசூலை குவித்திருக்கிறது ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான 'இங்கிலீஷ் விங்கிலீஷ்'
நீண்ட வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த ஸ்ரீதேவி, முக்கிய பாத்திரத்தில் நடித்த படம் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்'. கெளரி ஷிண்டே இயக்கத்தில் வெளியான இப்படம் இந்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பல்வேறு நாடுகளில் இப்படம் வெளியானது.
ஆகஸ்ட் 2013ல் ஜப்பானில் நடைபெற்ற பெண்கள் திரைப்பட விழாவில் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' திரையிடப்பட்டதில் இருந்தே, இப்படத்திற்கு அங்கு பெரும் எதிர்பார்ப்பு உண்டானது.
ஜப்பானில் ஜுன் 28ம் தேதி 33 திரையரங்குகளில் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' வெளியிடப்பட்டது. அங்கும் வசூலை வாரிக்குவித்து வருகிறது.
இதுவரை சுமார் 4 லட்சத்து 20 ஆயிரம் டாலர் வசூல் ஜப்பானில் மட்டும் ஈட்டியிருக்கிறது. இதற்கு முன்பு ஜப்பானில் '3 இடியட்ஸ்' படம் தான் அதிக வசூல் ஈட்டியது. அப்படத்தைத் தொடர்ந்து தற்போது 'இங்கிலீஸ் விங்கிலீஷ்' ஈட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.