தமிழ் சினிமா

த்ரிஷாவின் எக்ஸ் தளப் பக்கத்தில் அத்துமீறல்

ஸ்டார்க்கர்

த்ரிஷாவின் எக்ஸ் தளப் பக்கம் ஹேக் செய்யப்பட்டது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

முன்னணி நடிகையான த்ரிஷாவின் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை ‘கிரிப்டோ’ தொடர்பான பதிவொன்று வெளியானது. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது வெளியான ஒரு சில நிமிடங்களில் அவரது எக்ஸ் தளம் ஹேக் செய்யப்பட்டது உறுதியானது. இதனை த்ரிஷாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தினார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. சமீபத்தில் வெளியான ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்துக்கு நாயகியாக நடித்திருந்தார். அவரது அடுத்த படமான ‘குட் பேட் அக்லி’ படத்திலும் த்ரிஷாதான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படங்களைத் தொடர்ந்து ‘சூர்யா 45’, ‘தக் லைஃப்’, ‘விஸ்வாம்பரா’ உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக த்ரிஷா நடித்து வருகிறார்.

த்ரிஷாவின் எக்ஸ் தளம் ஹேக் செய்யப்பட்டது, திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தனது எக்ஸ் பக்கத்தை மீட்பதற்காக பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் த்ரிஷா.

SCROLL FOR NEXT