நடிகை மீனாட்சி சவுத்ரி சமீபத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வெகுவாக ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
விஜய் நடிப்பில் வெளியான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரவலான கவனத்தை ஈர்த்தார் மீனாட்சி சவுத்ரி. அதன்பின், தீபாவளிக்கு வெளியான‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வம்பாரா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஸ்வாக் சென்னின் ‘மெக்கானிக் ராக்கி’, வருண் தேஜ் நடித்துள்ள ‘மட்கா’ திரைப்படம் என பிஸியான நடிகையாக வலம் வருகிறார் மீனாட்சி சவுத்ரி.
சமீபத்தில் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷுடன் அவர் நடித்துள்ள ‘சங்கராந்தி வஸ்துன்னம்’ என்ற தெலுங்கு படம் பொங்கலுக்கு ரிலீஸாகி செம்ம ஹிட் ஆனது. அந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரிக்கு வெயிட்டான ரோல். அதில் மிரட்டியிருந்தார்.
‘த கோட்’ படம் தந்த பாடத்தால் ‘இனி நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க வேண்டும்’ என்று அவர் முடிவெடுத்தது கவனிக்கத்தக்கது.
பிஸியான ஷெட்யூலுக்கு இடையில் துபாய் ட்ரிப்பை முடித்த கையோடு, மீண்டும் பிஸியாகி இருக்கிறார். இதற்கிடையே, அவர் பகிர்ந்த போட்டோஷூட் படங்கள் மூலம் ரசிகர்களை சோஷியல் மீடியாவில் எங்கேஜிங்காகவும் வைத்துள்ளார்.