தமிழ் சினிமா

சம்மர் ஸ்பெஷலாக விஜய்யின் ‘சச்சின்’ ரீரிலீஸ்

ஸ்டார்க்கர்

கோடை விடுமுறையில் ‘சச்சின்’ படம் ரீரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது.

விஜய் நடித்த ‘சச்சின்’திரைப்படம் மறுவெளியீட்டுக்கு தயாராகி வந்தது. ஆனால், எப்போது வெளியீடு என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று தயாரிப்பாளர் தாணு தனது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார். 2005-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியான படம் ‘சச்சின்’. இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகிறது. அன்றைய தினத்தில் இருக்கும் என தெரிகிறது.

2024-ம் ஆண்டு விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் மீண்டும் வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு ‘சச்சின்’ மறுவெளியீடு உறுதியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பாடல்கள், காமெடி காட்சிகள் என அனைத்துமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

மறைந்த இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா, பிபாஷா பாசு, வடிவேலு, தாடி பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சச்சின்’. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT