தமிழ் சினிமா

சித்தார்த்தின் 40-வது படமான ‘3 BHK’ டைட்டில் டீசர் எப்படி?

செல்வ சூர்யா

சித்தார்த் நடிக்கும் 40-வது திரைப்படத்துக்கு '3 BHK' என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோ வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

இந்தப் படத்தை '8 தோட்டாக்கள்' மற்றும் 'குருதி ஆட்டம்' ஆகிய படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்குகிறார். சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' படத்தை தயாரித்த ஷாந்தி டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அமீர் ராம்நாத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீதா ரகுநாத், சைத்ரா ஆசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தினேஷ் கிருஷ்ணன் மற்றும் ஜித்தின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

‘இது ஒரு ராஜா கதை. இல்ல... இல்ல... இது நம்ம குடும்பத்தை பற்றிய கதை’ என்று ஆரம்பிக்கும் இந்த டீசர் வீடியோவின் மூலம் இது ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தை பற்றிய திரைப்படம் என்பது தெரிகிறது. கடைசியாக சித்தார்த் நடிப்பில் வெளிவந்த 'மிஸ் யூ' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று பெரிய அளவில் வசூல் செய்யாததால், இப்படத்தின் மூலம் கம்பேக் தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT