தமிழ் சினிமா

அலைபாயுதே படத்தின் முதல் சாய்ஸ் யார்? - மணிரத்னம் தகவல்

செய்திப்பிரிவு

மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், ஷாலினி நடித்து கடந்த 2000-ம் ஆண்டு வெளியான படம், ‘அலைபாயுதே’. மெகா வெற்றிபெற்ற இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இதை, ஷாருக்கான் - கஜோல் நடிப்பில் இயக்க இருந்ததாக மணிரத்னம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட மணிரத்னம் இதுபற்றி கூறும்போது, “ஷாருக்கானிடம் இந்தக் கதையை சொன்னதும் ஒப்புக்கொண்டார். ஆனால், இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் சரியாக அமையவில்லை.

அதனால், ‘அலைபாயுதே’ படத்தை எடுக்காமல், தில்சே (உயிரே) படத்தை இயக்கினேன். பிறகு தான், ‘அலைபாயுதே’ கதைக்கு கிளைமாக்ஸ் கிடைத்தது. அதை இயக்குவதற்கான ஆர்வம் இன்னும் அதிகமானது" என தெரிவித்துள்ளார். ‘அலைபாயுதே’, இந்தியில் 2002-ம் ஆண்டு ஷாத் அலி இயக்கத்தில் ‘ஸாதீயா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT