தமிழ் சினிமா

ரூ.50 கோடி வசூலை கடந்தது ‘மதகஜராஜா’ - ஜன.31 முதல் தெலுங்கிலும்!

ப்ரியா

தமிழகத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, ஜனவரி 31-ம் தேதி தெலுங்கிலும் வெளியாகிறது ‘மதகஜராஜா’. இப்படம் இதுவரை ரூ.50 கோடி வசூலைக் கடந்துள்ளது.

பொங்கல் வெளியீடாக ஜனவரி 12-ம் தேதி வெளியான படம் ‘மதகஜராஜா’. அனைத்து பிரச்சினைகளையும் கடந்து சுமார் 12 ஆண்டுகள் கழித்து இப்படம் திரைக்கு வந்தது. யாரும் எதிர்பாராத வகையில் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று, இதுவரை சுமார் ரூ.50 கோடி வசூல் செய்திருக்கிறது. இதன் வசூலைப் பார்த்து பல்வேறு வர்த்தக நிபுணர்கள் ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.

இந்த வரவேற்பினைத் தொடர்ந்து, தெலுங்கிலும் ஜனவரி 31-ம் தேதி ‘மதகஜராஜா’ வெளியாகிறது. இதன் ட்ரெய்லரை வெங்கடேஷ் வெளியிடவுள்ளார். தமிழில் பெற்ற வெற்றியைப் போலவே தெலுங்கிலும் இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு. அதே போல் வெளிநாடுகளிலும் ஜனவரி 31-ம் தேதி ‘மதகஜராஜா’ வெளியாகவுள்ளது.

சுந்தர்.சி இயக்கியுள்ள இப்படத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம், சோனு சூட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஜெமினி நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தார்.

SCROLL FOR NEXT