தமிழ் சினிமா

சொகுசு கப்பலில் சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’!

செய்திப்பிரிவு

சந்தானம், சுரபி நடித்த ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதை எஸ்.பிரேம் ஆனந்த் இயக்கி இருந்தார். இதன் தொடர்ச்சியாக ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ என்ற படம் உருவாகியுள்ளது. சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார்.

செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி உட்பட பலர் நடிக்கின்றனர். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, ஆஃப்ரோ இசையமைக்கிறார். நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், நடிகர்கள் ஆர்யா, சந்தானம் இணைந்து தயாரிக்கின்றனர். மே மாதம் வெளியாக இருக்கிறது.

படத்தை இயக்கும் பிரேம் ஆனந்த் கூறும்போது, ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ பெரும் வெற்றி பெற்றதால் அதன் அடுத்த பாகத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகளை ஒரு வருடமாகத் தொடர்ந்து செய்து முடித்தோம். அனைவரும் சிரித்து, ரசித்து மகிழும் படமாக இதுவும் இருக்கும். இதன் கதை சொகுசு கப்பலில் தொடங்கி, தீவு ஒன்றில் நடைபெறுகிறது.

இதற்காகப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் செட் அமைத்தோம். ‘டிடி ரிட்டர்ன்ஸை’ விட அதிக உற்சாகத்தை இந்தப் படம் வழங்கும்” என்றார். சந்தானத்தின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT