தமிழ் சினிமா

ஜன.24-ல் வெளியாகிறது ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’!

செய்திப்பிரிவு

சமீபத்தில் மறைந்த இயக்குநர் சங்கர் தயாள் இயக்கியுள்ள ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’. குழந்தை நட்சத்திரங்களான இமயவர்மன், இயக்குநர் சங்கர் தயாள் மகன் அத்வைத், ஹரிகா படேடா, மாஸ்டர் பவாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் திருப்புமுனை பாத்திரத்தில் யோகிபாபு, செந்தில் இணைந்து நடித்துள்ளனர். மற்றும் சரவணன், சுப்பு பஞ்சு, லிஸி ஆண்டனி, கோவிந்த மூர்த்தி, சித்ரா லட்சுமணன் நடித்துள்ளனர். ‘சாதக பறவைகள்’ சங்கர் இசை அமைத்துள்ள இந்தப் படம் குழந்தைகள் உலகத்தை மையமாக வைத்து, அரசியல் காமெடி வகைப் படமாக உருவாகியுள்ளது. மீனாட்சி அம்மன் மூவிஸ் சார்பில் அருண்குமார் சம்பந்தம், இயக்குநர் சங்கர் தயாள் தயாரித்துள்ள இந்தப் படம், வரும் 24-ம் தேதி வெளியாக இருக்கிறது.

SCROLL FOR NEXT