தமிழ் சினிமா

4 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வைகள்: ‘விடாமுயற்சி’ ட்ரெய்லர் சாதனை!

செய்திப்பிரிவு

லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விடாமுயற்சி’. அஜித், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பிப்ரவரி 6-ம் தேதி வெளியிடுகிறது.

இதன் ட்ரெய்லரை படக்குழு வியாழக்கிழமை (டிச.16) மாலை வெளியிட்டது. ஹாலிவுட் படங்களில் சாயலில் ஸ்டைலிஷ் ஆன மேக்கிங் உடன் படம் உருவாகியுள்ளதை ட்ரெய்லர் காட்டியதை. வெளியான ஒரு சில நிமிடங்களிலேயே ‘விடாமுயற்சி’ தொடர்பான பதிவுகள் எக்ஸ், இன்ஸ்டா உள்ளிட்ட தளங்களில் தீயாய் பற்றி எரிந்தன. இந்த சூழலில் தமிழ், தெலுங்கு இரண்டையும் சேர்ந்து வெளியான 4 மணி நேரங்களிலேயே 5 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது ‘விடாமுயற்சி’ ட்ரெய்லர்.

முன்னதாக பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட ‘விடாமுயற்சி’ திரைப்படம் பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. இப்படம் பிரேக்டவுன்’ படத்தின் ரீமேக். காப்புரிமை தொடர்பாக ஹாலிவுட் நிறுவனத்துடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளது. வாசிக்க > அஜித்தின் ‘விடாமுயற்சி’ ட்ரெய்லர் எப்படி? - காதலில் தொடங்கி ஆக்‌ஷனில் அதகளம்!

SCROLL FOR NEXT