தமிழ் சினிமா

வெற்றிமாறன் - சூர்யா இணையும் ‘வாடிவாசல்’ அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஸ்டார்க்கர்

‘வாடிவாசல்’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம்.

இயக்குநர் வெற்றிமாறன் ‘விடுதலை’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வந்ததால் ‘வாடிவாசல்’ எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார். சூர்யா மற்றும் வெற்றிமாறன் ஆகியோருடன் அவர் எடுத்த புகைப்படத்தினை வெளியிட்டு “அகிலம் ஆராதிக்க ‘வாடிவாசல்’ திறக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ‘சூர்யா 45’ படப்பிடிப்பை முடித்துவிட்டு, அவர் இதில் கவனம் செலுத்த இருப்பது உறுதியாகி இருக்கிறது. இப்படத்தின் ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், கலை இயக்குநராக ஜாக்கி ஆகியோர் பணிபுரிய உள்ளனர். இதில் வேறு யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பது விரைவில் தெரியவரும்.

‘வாடிவாசல்’ படம் குறித்த அறிவிப்பை இணையத்தில் சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மே 1-ம் தேதி ‘ரெட்ரோ’ வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து ‘சூர்யா 45’ இந்தாண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

அகிலம் ஆராதிக்க "வாடிவாசல்" திறக்கிறது#VetriMaaran @Suriya_offl#VaadiVaasal pic.twitter.com/ZPWfCDkF3C

SCROLL FOR NEXT