தமிழ் சினிமா

ரஜினியுடன் நடிக்கிறேன்!- சோனாக்‌ஷி

செய்திப்பிரிவு

ரஜினியுடன் நடிக்கும் படத்தின் மூலம் தனது தென்னிந்திய திரைப்பயணம் ஆரம்பமாவதாக, இந்தி திரையுலகின் முன்னணி நடிகை சோனாக்‌ஷி சின்கா தெரிவித்திருக்கிறார்.

'கோச்சடையான்' படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தினை பற்றிய செய்திகள் வலம் வர ஆரம்பித்திருக்கின்றன.

இப்படத்தில் ரஜினி, சோனாக்‌ஷி, அனுஷ்கா, ஒளிப்பதிவு - ரத்னவேலு, கதை - வசனம் - பொன்குமரன், திரைக்கதை - இயக்கம் கே.எஸ்.ரவிக்குமார் என்று ஏற்கனவே கூறியிருந்தோம். தற்போது இதனை சோனாக்‌ஷி சின்கா உறுதி செய்திருக்கிறார்.

ரஜினியுடன் நடிப்பது குறித்து சோனாக்‌ஷி அளித்துள்ள பேட்டியில், "ஒரு வழியாக தென்னிந்திய மொழி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். எனது முதல் படமே சிறந்த படமாக அமைந்திருப்பதில் மகிழ்ச்சி. ரஜினி சாருக்கு ஜோடியாக ஒரு நல்ல கதையில் நடிக்க இருக்கிறேன். இப்படத்தினைத் தொடர்ந்து எனக்கு நிறைய வாய்ப்புகள் அமையும் என்று நம்புகிறேன்" என்று கூறியிருக்கிறார்.

ஏற்கனவே 'விஸ்வரூபம்' படத்தில் கமலுக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, படப்பிடிப்பு தொடங்க தாமதமானதால் விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT