தமிழ் சினிமா

‘அகத்தியா’ படத்துக்கு விளையாட்டு ஆப்!

செய்திப்பிரிவு

பாடலாசிரியர் பா.விஜய் இயக்கியுள்ள படம், ‘அகத்தியா’. ஜீவா, அர்ஜுன், ராஷி கன்னா நடித்துள்ளனர். ஃபேன்டஸி த்ரில்லரான இந்தப் படம் வரும் 31-ம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்துக்கு விளையாட்டு ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கற்பனை-சாகச விளையாட்டு, எல்லா வயதினரும் விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான நிகழ்வில் ‘என் இனிய பொன் நிலாவே’ என்ற இந்தப் படத்துக்கான பாடலும் வெளியிடப்பட்டது. நடிகர் ஜீவா கூறும்போது, “என்னை ஒரு வீடியோ கேமின் பகுதியாகப் பார்ப்பது நம்பமுடியாத அனுபவம். இது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இந்த முயற்சி ‘அகத்தியா’வை இளைய தலைமுறையினரிடம் வெகுவாக எடுத்துச் செல்லும்” என்றார்.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், பா.விஜய், நடிகை ராஷி கன்னா, இந்த கேம் ஆப் வடிவமைப்பின் இணை தயாரிப்பாளர் அனீஷ் அர்ஜுன் தேவ் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT