தமிழ் சினிமா

‘இந்த வருடம் கண்டிப்பாக மீண்டு வருவேன்’ - ஜெயம் ரவி

செய்திப்பிரிவு

ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள ரொமான்ஸ் த்ரில்லர் படம், ‘காதலிக்க நேரமில்லை’. ரெட் ஜெயன்ட் தயாரித்துள்ள இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு வரும் 14-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.

அப்போது ஜெயம் ரவி கூறும்போது, “இந்தப் படத்தில் நித்யா மேனன் பெயருக்குப் பிறகு என் பெயர் இடம்பெறும். அது ஏன் என பலர் கேட்டார்கள். என் மீதான நம்பிக்கைத்தான். திரை வாழ்க்கையில் நிறைய விஷயங்களை உடைத்துள்ளேன். இது மட்டும் ஏன் கூடாது?

ஷாருக்கானை பார்த்துத் தான் இந்த முடிவை எடுத்தேன். பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை. அவர்கள் இல்லாமல் நாம் இல்லை. இனி பெண் இயக்குநர்கள் படத்தில் இதைப் பின்பற்று வேன். எனக்குக் கஷ்டமான காலம் இருந்தது, நான் நடித்த படங்கள் ஓடவில்லை. என் மீது தவறு இல்லாதபோது ஏன் துவண்டு போக வேண்டும் எனத் தோன்றியது. அடுத்த வருடமே என் 3 படம் ஹிட். துவண்டு போவது தோல்வியில்லை, விழுந்தால் எழாமல் இருப்பதுதான் தோல்வி. நான் கண்டிப்பாக இந்த வருடம் மீண்டு வருவேன்” என்றார்.

ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் அர்ஜுன் துரை, ஒளிப்பதிவாளர் கேவ்மிக் ஆரி, எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT