யுவன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தில் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
'பாகுபலி 2' படத்தை வெளியிட்ட கே புரொடக்ஷன்ஸ் ராஜராஜன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் YSR பிலிம்ஸ்( பி) லிட் இணைந்து தயாரிக்கும் படம் 'பியார் பிரேமா காதல்'. ஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் முழுக்க முழுக்க காதல் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
யுவன் இசையமைக்கும் இப்படத்தில் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. யுவன் இசையில் அதிக பாடல்களைக் கொண்ட படமாக ‘பியார் பிரேமா காதல்’ அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்துக்கு ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
முழுமையாக படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நாளை (ஜூலை 29) இப்படத்தின் முழுமையான இசை வெளியாகவுள்ளது.