சீனாவில் ‘பாகுபலி 2’ படத்தின் வசூலை முறியடித்து ‘மகாராஜா’ படம் மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் மாபெரும் வரவேற்பினை படைத்தது. திரையரங்குகளில் மட்டுமன்றி ஓடிடி தளத்தில் பல்வேறு நாடுகளில் தொடர்ச்சியாக முதலிடத்தில் இருந்தது. இந்த வரவேற்பினால் சீனாவில் படத்தினை வெளியிட்டார்கள்.
சீன மக்களிடையேயும் ‘மகாராஜா’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. விரைவில் அங்கு மட்டும் ரூ.100 கோடி வசூலைக் கடக்கும் என எதிர்நோக்கி இருக்கிறது. அதுமட்டுமன்றி ‘பாகுபலி 2’ படத்தின் வசூலையும் முறியடித்திருக்கிறது. இப்போதைக்கு அதிக வசூல் செய்த தென்னிந்திய திரைப்படம் என்ற மாபெரும் சாதனையைப் பிடித்திருக்கிறது. அதிக வசூல் செய்த இந்திய படங்களில் 10 இடத்தில் இருக்கிறது ‘மகாராஜா’.
உலகளவில் ஒட்டுமொத்தமாக ரூ.193 கோடி வசூலை எட்டியுள்ளது ‘மகாராஜா’. இதனை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வெளியிட்டன. இதில் மம்தா மோகன்தாஸ், அனுராக் கஷ்யாப், நட்டி, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் விஜய் சேதுபதியுடன் நடித்திருக்கிறது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 50-வது திரைப்படம் ‘மகாராஜா’ என்பது நினைவுகூரத்தக்கது.