தமிழ் சினிமா

கதையின் நாயகன் ஆனார் ரோபோ சங்கர்

செய்திப்பிரிவு

ரோபோ சங்கர் கதையின் நாயகனாக நடிக்கும் படம், ‘அம்பி’. அவர் ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார். ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, மோகன் வைத்யா உட்பட பலர் நடித்துள்ளனர். வெற்றிவேல் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.பி. முரளிதரன் இசையமைத்துள்ளார். டி2 மீடியா சார்பில் எஃப். பிரசாந்தி பிரான்சிஸ் தயாரித்துள்ள இந்தப்படத்தை, பாஸர் ஜே எல்வின் தயாரித்துள்ளார்.

அவர் கூறும்போது, “இது ‘ஃபேமிலி டிராமா’ கலந்த காமெடி படம். கதையின் நாயகன் நிஜத்தில் அம்பியாக, அப்பாவியாக இருக்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் அவரை பெரிய வீரன் என நம்புகிறார்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள். அவர்களிடம் மாட்டிக் கொண்ட நாயகன், அம்பியாகவே இருந்தாரா, அந்நியன் ஆனாரா என்பது கதை” என்றார்.

SCROLL FOR NEXT