தமிழ் சினிமா

5 மொழிகளில் வெளியாகும் யோகிபாபு படம்

செய்திப்பிரிவு

யோகிபாபு, கன்னட நடிகர் ரூபேஷ் ஷெட்டி, வர்ஷா விஸ்வநாத் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் ‘சன்னிதானம் பி.ஓ’. இவர்களுடன் சித்தாரா, பிரமோத் ஷெட்டி, ‘மூணாறு’ ரமேஷ், கஜராஜ், வினோத் சாகர் உட்பட பலர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதையை அஜினு ஐயப்பன் எழுத, அமுதா சாரதி இயக்குகிறார். சர்வதா சினி கேரேஜ், ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் மதுசூதன் ராவ், வி.விவேகானந்தன், ஷபீர் பதான் தயாரிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு சபரிமலை ஐயப்பன் சன்னிதானம், பம்பை, எருமேலி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும் வழியில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்கிறது. அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகள்தான் கதை. தமிழ், கன்னடம், துளு, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படம் அடுத்த வருட கோடையில் ரிலீஸாகிறது.

SCROLL FOR NEXT