தமிழ் சினிமா

சூர்யா படத்தில் ‘லப்பர் பந்து’ ஸ்வாசிகா

செய்திப்பிரிவு

‘கங்குவா’ படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இதில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரேயா ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இதையடுத்து ஆர்ஜே பாலாஜி இயக்கும் படத்தில் நடிக்கிறார், சூர்யா. இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் சமீபத்தில் தொடங்கியது. இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இந்நிலையில் ‘லப்பர் பந்து’ படத்தில் தினேஷ் ஜோடியாக நடித்த ஸ்வாசிகா இதில் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு முக்கிய வேடம் என்று கூறப்படுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT