தமிழ் சினிமா

'ஸ்வீட் ஹார்ட்' முதல் தோற்றம் வெளியீடு

செய்திப்பிரிவு

ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம், 'ஸ்வீட் ஹார்ட்'. அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ்.சுகுமார் இயக்கியுள்ளார். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரொமான்டிக் காமெடி படமான இதைத் தனது ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார்.

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முதல் தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சிலம்பரசனும் யுவன் சங்கர் ராஜாவும் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர்

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT