தமிழ் சினிமா

இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார் - திரையுலகம் அதிர்ச்சி

செய்திப்பிரிவு

சென்னை: ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘சத்திய சோதனை’ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார். அவருக்கு வயது 41. அவரது மறைவு திரையுலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கடந்த 2017-ல் வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படம் தான் சுரேஷ் சங்கையா இயக்கிய முதல் படம். புதுமண தம்பதியர்கள் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த ஆடு ஒன்றை பலி கொடுக்க சென்று இருப்பார்கள். அங்கு என்ன நடந்தது என்பதுதான் கதை. விமர்சன ரீதியாக இந்தப் படம் கவனம் பெற்றது.

தொடர்ந்து கடந்த 2023-ல் அவரது இரண்டாவது படமான ‘சத்திய சோதனை’ படத்தை இயக்கி இருந்தார். ஒரு கொலையை மையமாக வைத்து பிளாக் காமெடி பாணியில் படத்தை இயக்கி இருந்தார்.

ராஜபாளையம் அருகில் உள்ள கரிசல்குளத்தை சேர்ந்த சுரேஷ் சங்கையா கல்லீரல் பாதிப்பு தொடர்பான பிரச்சினைக்காக சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில், அந்த சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.

SCROLL FOR NEXT