தமிழ் சினிமா

தீபாவளிக்கு தயாராகிறது அனேகன்?

ஸ்கிரீனன்

'ஐ', 'கத்தி' ஆகிய படங்களில் தீபாவளி வெளியீடுக்கு ஏதாவது தாமதம் ஏற்பட்டால் 'அனேகன்' படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

தனுஷ், அமைரா, கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிக்க, கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கும் படம் 'அனேகன்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இப்படத்திற்கு தற்போது தனுஷ் டப்பிங் பேசி வருகிறார். இறுதிகட்டப் பணிகளை துரிதப்படுத்தி தீபாவளி வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பு நிறுவனம் செய்திருக்கிறது.

இது குறித்து விசாரித்த போது, "'ஐ', 'கத்தி' ஆகிய இரு படங்களுமே தீபாவளிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. 'பூஜை' மட்டுமே ஆரம்பத்திலேயே அதிகாரப்பூர்வமாக தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

ஆகையால் 'அனேகன்' படத்தின் அனைத்துப் பணிகளும் முடித்து வைத்துவிடுவோம். 'ஐ', 'கத்தி' ஆகிய இரு படங்களுமே வெளியாகாத பட்சத்தில் 'அனேகன்' வெளியாவது உறுதி" என்றார்கள்.

SCROLL FOR NEXT