லோகேஷ் கனகராஜ் | கோப்புப்படம் 
தமிழ் சினிமா

‘கூலி’, ‘லியோ 2’ அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

ஸ்டார்க்கர்

‘கூலி’ மற்றும் ‘லியோ 2’ படங்கள் குறித்து பேசியிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். நெல்சன் தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘ப்ளடி பெக்கர்’ படத்தை பார்வையிட்டார் லோகேஷ் கனகராஜ். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து அப்படம் குறித்து பேசினார்.

அப்போது பத்திரிகையாளர்கள் ‘கூலி’, விஜய் மாநாடு மற்றும் ‘லியோ 2’ குறித்து கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கு லோகேஷ் கனகராஜ், “‘கூலி’ படப்பிடிப்பு சென்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் 2 ஷெட்டியூல் இருக்கிறது. அதோடு படப்பிடிப்பு முடிவடைந்துவிடும். 2025-ம் ஆண்டு படம் வெளியாகும். அதன் அதிகாரபூர்வ தேதி விரைவில் சொல்கிறேன்.

விஜய் சார் மாநாடு குறித்து நான் என்ன சொல்வது, வாழ்த்துகள் தான். ‘லியோ 2’ குறித்து விஜய் அண்ணா தான் சொல்ல வேண்டும். அவர் ஒகே சொன்னால் கண்டிப்பாக நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT