தமிழ் சினிமா

அதிருப்தி எதிரொலி: தமிழ் டப்பிங்கை இரண்டே நாளில் முடித்த துல்கர்!

ஸ்டார்க்கர்

டப்பிங் குறித்து இணையத்தில் எழுந்த கருத்தை முன்வைத்து, துல்கர் சல்மான் உடனடியாக அவரே டப்பிங் பேசி முடித்துக் கொடுத்துள்ளார்.

வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான், ராம்கி, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லக்கி பாஸ்கர்’. சித்தாரா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் அக்டோபர் 31-ம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் இதன் ட்ரெய்லர் அனைத்து மொழிகளிலும் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது.

இதில் தமிழ் ட்ரெய்லருக்கு துல்கர் சல்மான் டப்பிங் செய்யவில்லை. அவருடைய குரல் இல்லாமல் வேறொரு குரலில் காட்சிகள் இடம்பெற்றதால் இணையத்தில் பலரும் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். இதனை துல்கர் சல்மானிடம் தெரிவித்துள்ளது படக்குழு.

உடனடியாக தன்னுடைய பணிகள் அனைத்தையும் ஓரம் வைத்துவிட்டு, ‘லக்கி பாஸ்கர்’ தமிழ் டப்பிங் பணிகளைத் தொடங்கினார் துல்கர் சல்மான். இரண்டு நாட்களில் முழுமையாக ஒட்டுமொத்த தமிழ் டப்பிங்கையும் முடித்துக் கொடுத்துவிட்டார். இதனால் படத்தில் துல்கர் சல்மானின் குரல் தான் இடம்பிடிக்கவுள்ளது. தமிழகத்தில் ‘லக்கி பாஸ்கர்’ படத்தினை ராக்ஃபோர்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது.

SCROLL FOR NEXT