தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு மற்றும் நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்துக்கு தமிழ்த் திரைத்துறை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன் தொகுப்பு...
சிவகார்த்திகேயன்: “இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.”
சசிகுமார்: “உங்கள் வரவு, எளிய மக்களுக்கான பெரிய நம்பிக்கையாக அமையட்டும். நல்வாழ்த்துகள்… விஜய் சார்.”
நெல்சன்: “என் மனமார்ந்த வாழ்த்துகள் விஜய் சார்... இன்று உங்கள் புதிய தொடக்கத்திற்கு.”
ஜெயம் ரவி: “தவெக கட்சியின் மாநாட்டுக்கு விஜய் அண்ணாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். திரையுலகில் காட்டிய அதே ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் அரசியலில் கொண்டு வாருங்கள். இந்தப் புதிய பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.”
விஜய் சேதுபதி: “தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு சிறக்க, தவெக தலைவர் விஜய் சாருக்கும், தொண்டர்களுக்கு வாழ்த்துகள்.”
தன்ஷிகா: “தமிழக வெற்றிக் கழகம் மாற்றத்தை எதிர்பார்த்து வாழ்த்துகிறோம் விஜய் சார்.”
சிபிராஜ்: “தவெக கட்சியின் முதல் மாநாட்டுக்கு விஜய் அண்ணாவுக்கு எனது வாழ்த்துகள். அவருடைய பேச்சை எதிர்நோக்கி இருக்கிறேன். அவரது புதிய பயணம் அவருக்கு வெற்றியை தரட்டும்.”
அஸ்வத் மாரிமுத்து: “என் நெஞ்சில் குடியிருக்கும்“ என்று நீங்கள் இன்று கூறியவுடன் அலறப்போகும் தமிழகத்தை காண காத்திருக்கும் கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். வாழ்த்துகள் விஜய் சார்.”
வசந்த் ரவி: “மனமார்ந்த வாழ்த்துகள் விஜய் சார். உங்கள் அற்புதமான தொடக்கத்திற்கு. உங்கள் படங்கள் மூலம் மட்டும் எங்களில் பலரும் உண்மையிலேயே உத்வேகமாக இருந்திருக்கிறீர்கள். விரைவில் உங்கள் அரசியல் பயணத்திலும் நினைவுக் கூரப்படுவீர்கள், பாராட்டப்படுவீர்கள். இன்று உங்களுக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு வரலாற்று தருணமாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.”
இயக்குநர் வெங்கடேஷ்: “பிரம்மாண்ட கூட்டத்துடன் பெரும் எதிர்பார்ப்புடன் ஆரம்பமாக இருக்கும் ‘தமிழக வெற்றிக் கழக’ தலைவர் தளபதி விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!”
ஆர்.ஜே.பாலாஜி: “அன்புள்ள விஜய் சார், சினிமாவை விட்டுவிட்டு தேர்தல் அரசியலில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது ஒரு பெரிய முடிவு. உங்களின் மிகப் பெரிய பயணம் இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்!”