தமிழ் சினிமா

ஒரே டேக்கில் 15 நிமிடக் காட்சி... ‘சூர்யா 44’-ல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!  

ஸ்டார்க்கர்

சென்னை: ‘சூர்யா 44’ படத்தில் ஒரே டேக்கில் 15 நிமிடக் காட்சியை படக்குழு பதிவு செய்துள்ளது. இந்தக் காட்சி சரியாக வந்ததையடுத்து, படக்குழுவினர் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஹா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சூர்யா 44’. 2டி நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் படம் கேங்க்ஸ்டர் படம் என தகவல் வெளியான நிலையில், இது காதல் கதை என்று பேட்டியொன்றில் உறுதிப்படுத்தினார் கார்த்திக் சுப்பராஜ்.

இப்படத்தில் 15 நிமிடக் காட்சி ஒன்றை ஒரே டேக்கில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அந்தக் காட்சியில் வசன உச்சரிப்பு, பாடல், சண்டை என அனைத்துமே கலந்து இருக்கும் என்கிறது படக்குழு. இந்தக் காட்சிக்காக முன் தயாரிப்பு செய்யப்பட்டு, ஒரே டேக்கில் முடித்திருக்கிறது படக்குழு. இந்தக் காட்சி சரியாக வந்தப் பிறகு சூர்யாவுக்கு படக்குழுவினர் பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள். இதே போன்று சமீபத்தில் விக்ரமின் ‘வீரதீர சூரன்’ படத்தில் 18 நிமிடக் காட்சியை ஒரே டேக்கில் காட்சிப்படுத்தி இருந்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT