தமிழ் சினிமா

‘சூப்பர் ஸ்டார்’ என அழைத்த தொகுப்பாளர்: இணையத்தை வென்ற சூர்யாவின் பதில்!

ஸ்டார்க்கர்

சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டதற்கு சூர்யா அளித்துள்ள பதிலை இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கங்குவா’. இப்படம் பல்வேறு மொழிகளில் நவம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்காக தற்போது மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் விளம்பரப்படுத்தி வருகிறார் சூர்யா. டெல்லி மற்றும் மும்பை விளம்பர நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, தற்போது ஹைதராபாத்தில் விளம்பர பணிகளைத் தொடங்கியிருக்கிறார் சூர்யா.

இதனிடையே வட மாநிலத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் சூர்யாவை ‘சூப்பர் ஸ்டார்’ என நிகழ்ச்சி தொகுப்பாளர் அழைத்தார். உடனடியாக சூர்யா, “சூப்பர் ஸ்டார் எப்போதுமே ரஜினி சார் மட்டுமே. அவர் ஒருவரே சூப்பர் ஸ்டார். அவருடைய பெயரை எடுத்து நான் பேட்ஜ் போன்று அணிந்துக் கொள்ள முடியாது” என்று பதிலளித்துள்ளார்.

இதே போன்று மற்றொரு பேட்டியில் சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டதற்கும் இதே பதிலை அளித்துள்ளார் சூர்யா. இந்த இரண்டையும் வைத்து சூர்யாவை இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT