தமிழ் சினிமா

நட்டி 2 வேடங்களில் நடிக்கும் ‘ஆண்டவன் அவதாரம்’

செய்திப்பிரிவு

நஞ்சுபுரம், அழகு குட்டி செல்லம், சாலை ஆகிய படங்களை இயக்கியவர் சார்லஸ். அடுத்து தனது லைட்சவுண்ட் அண்ட் மேஜிக் நிறுவனம் சார்பில் ‘ஆண்டவன் அவதாரம்’ என்ற படத்தைத் தயாரித்து இயக்குகிறார். நட்டி என்ற நட்ராஜ் சுப்ரமணியம் இதில் 2 வேடங்களில் நடிக்கிறார். நடிகர் ராகவ் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.

படம் பற்றி இயக்குநர் சார்லஸ் கூறும்போது, “நடிகர் நட்டி, வழக்கமான இரட்டை வேட கதாபாத்திரமாக இல்லாமல் யூகிக்க முடியாத கேரக்டரில் நடித்துள்ளார். இது சயின்ஸ் பிக் ஷன் படம் என்பதால் ‘எந்திரன்’ படத்தில் ரஜினிகாந்த் நடித்த கதாபாத்திரங்கள் போன்று இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நிகழ்காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்களை வைத்து இதை உருவாக்கி உள்ளோம். நகைச்சுவையையும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தையும் ஒன்றாக இணைத்து இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT