‘கங்குவா’ படத்தின் கதைக்களம் என்ன என்பது தெரியவந்துள்ளது. சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இதுவரை டீஸர் மற்றும் ஒரு பாடல் மட்டுமே வெளியாகியுள்ளது.
அக்டோபர் 10-ம் தேதி வெளியாக இருந்த இந்தப் படம் தற்போது நவம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் அக்டோபர் 20-ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக இசை வெளியிட்டு விழா நடைபெற இருக்கிறது. அதிலிருந்து படத்தினை பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இதனிடையே, வெளிநாட்டில் டிக்கெட் புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் இணையத்தில் இருந்து ‘கங்குவா’ படத்தின கதைக்களம் என்ன என்பது தெரியவந்துள்ளது.
பண்டைய கால வீரமும், நவீன கால தைரியமும் சந்திப்பதே ‘கங்குவா’ படத்தின் கதை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தனது மக்களைக் காப்பாற்ற ஒரு பழங்குடி போர்வீரனின் கடுமையான போராட்டம், நிகழ்காலத்தில் ஒரு நிழல் காவலரின் ஆபத்தான தேடலுடன் மர்மமான முறையில் இணைக்கப்படுகிறது.
காலப்போக்கில் வீரத்தின் இந்த பிடிமான உணர்ச்சிக் கதை, இதயத்தைத் துடிக்கும் செயலையும் யுகங்களையும் மீறும் ஒரு மர்மத்தையும் உறுதியளிக்கிறது என்று ‘கங்குவா’ படக்குழுவினர் படத்தின் கதையாக தெரிவித்துள்ளனர்.