தமிழ் சினிமா

‘விஜய் 69’-ல் இணைந்த நடிகர் நரேன்! 

செய்திப்பிரிவு

சென்னை: விஜய்யின் 69-வது படத்தில் நடிகர் நரேன் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஒவ்வொரு நாளும் ஒரு அப்டேட்டை வெளியிட்டு வருகிறது.

அதன்படி, ‘விஜய் 69’ படத்தில் வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கவுதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி ஆகியோர் நடிப்பதாக இன்று (அக்.3) அறிவிக்கப்பட்டது. தற்போது நரேன் இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. நரேன் மிஷ்கின் இயக்கி வரும் ‘ட்ரெயின்’ படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

வெங்கட் பிரபு இயக்கிய ‘தி கோட்’ படத்தினை முடித்துவிட்டு, ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார் விஜய். இதனை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பூஜை நாளை (அக்.4) சென்னையில் நடைபெற உள்ளது. 5-ம் தேதி முதல் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதற்கான அரங்குகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும், பெரும்பாலான காட்சிகளை பிரமாண்ட அரங்கு ஒன்றில் படமாக்க உள்ளார்கள். அதனை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக இருக்கிறார் ஹெச்.வினோத். அது முடிவானவுடன் அந்த அரங்கின் பணிகள் தொடங்கவுள்ளது. படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் படம் வெளியாக இருக்கிறது.

SCROLL FOR NEXT