தமிழ் சினிமா

செப்டம்பரில் ‘சபாஷ் நாயுடு’

செய்திப்பிரிவு

‘விஸ்வரூபம் 2’ படத்தினை ஆகஸ்டு மாதம் ரிலீஸ் செய்யவிருக்கும் வேலைகள் நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில் ‘பிக் பாஸ் 2’ சீசனை முடித்துக்கொண்டு ‘சபாஷ் நாயுடு’ பட வேலைகள் கவனம் செலுத்த நடிகர் கமல்ஹாசன் திட்டமிட்டிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் கடந்த ஆண்டு முழு வேகத்துடன் தொடங்கப்பட்டப் படம் சபாஷ் நாயுடு. முழுக்க காமெடி களமாக ரம்யா கிருஷ்ணன், ஸ்ருதிஹாசன் கூட்டணியில் கமல் உருவாக்க திட்டமிட்ட படம் அது. தொடங்கப்பட்ட சில நாட்களில் காலில் அடிபட்ட விபத்து, அடுத்து அரசியல் நுழைவு என பிஸியானதால் பட வேலைகளை கமல்ஹாசன் அப்படியே கிடப்பில் போட்டார். இந்நிலையில் ஒவ்வொரு பணிகளாக தற்போது முடிக்கும் வேலையில் இறங்கியுள்ள அவர் வருகிற செப்டம்பர் மாதம் ‘சபாஷ் நாயுடு’ பட வேலைகளை கையில் எடுக்கலாம் என களத்தில் இறங்கியுள்ளார்.

SCROLL FOR NEXT