தமிழ் சினிமா

ராகவா லாரன்ஸை இயக்கும் தெலுங்கு இயக்குநர்

செய்திப்பிரிவு

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்துக்குப் பிறகு ராகவா லாரன்ஸ், ‘துர்கா’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து அவரது 25-வது படத்தைத் தெலுங்கில் ராக்‌ஷசடு, கில்லாடி படங்களை இயக்கிய ரமேஷ் வர்மா இயக்குகிறார்.

ஏ ஸ்டூடியோஸ் எல்எல்பி சார்பில் கோனேரு சத்யநாராயணா, நீலாத்ரி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஹவ்விஷ் புரொடக்‌ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கிறார். சத்யநாராயணாவும் ரமேஷ் வர்மாவும் இணையும் 3-வது படம் இது.

‘மிகப்பெரிய ஆக்‌ஷன் அட்வென்சர் ஆரம்பம்' என்ற போஸ்டருடன் படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகும் இதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்குகிறது.

SCROLL FOR NEXT