தமிழ் சினிமா

புற்றுநோய் மருத்துவமனைக்காக பரத்வாஜ் இசை நிகழ்ச்சி!

செய்திப்பிரிவு

காதல் மன்னன், அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, ஆட்டோகிராப், ஐயா உட்பட பல படங்களுக்கு இசையமைத்திருப்பவர் பரத்வாஜ்.

இவர், யோகா அறக்கட்டளை மற்றும் ஸெஸ்ட் என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகிலுள்ள செயின்ட் ஜார்ஜ் விளையாட்டு மைதானத்தில் அக்.19-ம் தேதி இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.

திருப்பூர் மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசுடன் இணைந்து திருப்பூர் ரோட்டரி கிளப் அங்கு புற்று நோயாளிகளுக்கான இலவச சிறப்பு மருத்துவமனையை கட்டி வருகிறது. அதற்கு நிதி திரட்டும் விதமாக, இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நிகழ்ச்சிக்கான நுழைவு சீட்டுக்கு பேடிஎம் இன்சைடர் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். இதற்கான டிக்கெட் வெளியீட்டு விழா. சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் சரண், நடிகை மானு வெளியிட்டனர்.

SCROLL FOR NEXT