ரஜினிகாந்துடன் தினேஷா ரவிச்சந்திரன், பிரசாத், சந்தோஷ் ரவிச்சந்திரன். 
தமிழ் சினிமா

‘கிரவுட் ஃபண்ட்டிங்’கில் உருவான ரத்தமாரே

செய்திப்பிரிவு

இந்திய மற்றும் ஈழத்தமிழர்கள் 13 பேர் இணைந்து டிஎஸ்எஸ் ஜெர்மனி பிலிம்ஸ், வி2 கிரியேஷன், நியூ ஜெர்சி என்ற பட நிறுவனங்கள் சார்பில் ‘கிரவுட் ஃபண்ட்டிங்’ முறையில் தயாரித்துள்ள படம், ‘ரத்தமாரே’.

இதில் லிவிங்ஸ்டன், வையாபுரி, அம்மு அபிராமி, பிரசாத், ரமா, ஜனனி என பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு விபின்.ஆர் இசை அமைத்துள்ளார்.

இயக்குநர் தினேஷா ரவிச்சந்திரன் கூறும் போது, “படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. என் வாழ்வில் நான் பார்த்த, என்னைப் பாதித்த, இந்தச் சமூகத்தில் மாறவேண்டிய, மாற்ற வேண்டிய சில சம்பவங்களை இதில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளேன். ரஜினியின் ‘ஜெயிலர்’ பட பாடல் வரியில் இருந்து ‘ரத்தமாரே’ என்ற தலைப்பை வைத்துள்ளோம். இந்த தலைப்புக்காக மரியாதை நிமித்தமாக ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றோம்” என்றார்.

SCROLL FOR NEXT