தமிழ் சினிமா

நயன்தாரா எக்ஸ் தள கணக்கு திடீர் முடக்கம்

செய்திப்பிரிவு

நடிகர், நடிகைகள் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கின்றனர். தாங்கள் நடிக்கும் படங்கள் பற்றிய தகவல்களை அதில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் எக்ஸ் தளத்தில் அதிக பாலோயர்களை கொண்டுள்ள நடிகை நயன்தாராவின் கணக்கை சிலர் சிறிதுநேரம் முடக்கினர். அதில் கிரிப்டோ தொடர்பாக இரண்டு பதிவுகள் வெளியிடப்பட்டன. பின்னர் அவர் கணக்கு மீட்கப்பட்டது.

இதுபற்றி நயன்தாரா, “எனது எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டது. ஏதாவதுதேவையில்லாத பதிவுகள் எனது கணக்கில் தென்பட்டிருந்தால் அதைப் பொருட்படுத்தவேண்டாம்" என கூறியுள்ளார்

SCROLL FOR NEXT