தமிழ் சினிமா

கதை கேட்பதில் கவனம் செலுத்தும் நயன்

செய்திப்பிரிவு

‘லஷ்மி’, ‘மா’ குறும்பட இயக்குநர் சர்ஜூன் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்னும் இரண்டு நாட்களில் நிறைவு பெறுகிறது.

ஜூலை 10 ம் தேதி முதல் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடக்கிறது. இதில் யோகிபாபு, நயன்தாரா பகுதிகள் படமாக்கப்பட உள்ளன. அடுத்தடுத்து நயன் நடிப்பில் ‘இமைக்கா நொடிகள்’ ’கோலமாவு கோகிலா’ திரைப்படங்கள் தயாராக உள்ள நிலையில் படப்பிடிப்பில் தொடர்ந்து அடுத்தடுத்து புதிய படங்களுக்கான கதைகள் கேட்பதில் அதிக நேரம் செலவிடுகிறார், நயன்தாரா. இதில் பெரும்பாலும் நாயகியை மையமாக வைத்து சொல்லப்படும் கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிகிறது. இதற்கிடையே முன்னணி நாயகர்கள் படம் என்றால் நட்பு அடிப்படையில் அதையும் தவிர்ப்பதில்லை. அதேபோல யாருடைய படமாக இருந்தாலும் கதையில் அவருக்கு என்ன முக்கியத்துவம் என்பதை அவர் கேட்பதில் தவறுவதே இல்லை.

SCROLL FOR NEXT