தமிழ் சினிமா

தீபாவளி ரேஸில் கவினின் ‘பிளடி பெக்கர்’

செய்திப்பிரிவு

கவின் நடித்துள்ள 'பிளடி பெக்கர்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அமரன்'. அவர் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு அக். 31-ம்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்' படமும் இதே நாளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. வெங்கி அட்லூரிஇயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்' படமும் அக். 31-ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், இந்த ரேஸில், கவின் நடிப்பில் உருவாகியுள்ள 'பிளடி பெக்கர்' படமும் இணைந்துள்ளது. இந்தப் படமும் தீபாவளிக்கு வெளியாகிறது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT