தமிழ் சினிமா

ரூ.100 கோடி வசூலை நோக்கி ‘தங்கலான்’

செய்திப்பிரிவு

விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், டேனியல் கால்டகிரோன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. பா.ரஞ்சித் இயக்கிய இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்த இந்தப் படம் தமிழ், தெலுங்கில் கடந்த 15-ம் தேதி வெளியானது. வரும் 30-ம் தேதி இந்தியில் வெளியாக இருக்கிறது. கோலார் தங்க வயல் பின்னணியில் உருவான இந்தப்படம், இப்போது உலக அளவில் ரூ.100 கோடி வசூலை நெருங்குவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT