போகன், சங்கிலி புங்கிலி கதவ தொற, மாயவன் படங்களில் கண்களைச் சிமிட்டி நடிக்கும் கதாபாத்திரங்களில் வலம் வந்த அக்ஷரா கவுடா தொடர்ந்து தமிழில் வாய்ப்பு உருவாகாததால் சொந்த மொழி கன்னடத்தில் பிஸியாகத் தொடங்கினார். இந்நிலையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, நாகேஷ் நடிப்பில் அனிமேஷன் கலவையாக உருவாகும் ‘தென் ஆப்ரிக்காவில் ராஜூ’ படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். அனிமேஷன் காட்சிகள் அதிகம் இடம்பெறும் இப்படத்தின் அக்ஷரா கவுடா நடிக்கும் காட்சிகள் நேரடியான பின்னணியில் படமாக்கத் திட்டமிட்டிருக்கிறது, படக்குழு.