தமிழில் அடுத்த மாதம் வெளிவர உள்ள ‘சண்டக்கோழி 2’ படத்தைத் தொடர்ந்து, தெலுங்கில் வெளியான ‘டெம்பர்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷால் நடிப்பது உறுதியாகியுள்ளது.
இதற்கிடையில், ஜெயம்ரவி, அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான ‘போகன்’ படத்தை இயக்கிய லஷ்மன் இயக்கத்திலும் விஷால் நடிக்கிறார். இந்த இரு பட வேலைகளிலும் ஒரே நேரத்தில் மாறி மாறி கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார் விஷால்.