தமிழ் சினிமா

ஆக.2-ல் வெளியாகிறது ‘ஜமா’

செய்திப்பிரிவு

சென்னை: அறிமுக இயக்குநர் பாரி இளவழகன் இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம், ‘ஜமா’. ‘கூழாங்கல்’ படத்தைத் தயாரித்த லர்ன் அன்ட் டீச் புரொடக் ஷன்ஸ் நிறுவனத்தின் சாய் தேவானந்த் இதை தயாரித்துள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார். தெருக்கூத்துப் பின்னணியில் உருவாகியுள்ள இதில், அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், மணிமேகலை, வசந்த் மாரிமுத்து உட்பட பலர் நடித்துள்ளனர். கோபால் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படம் ஆக.2-ம் தேதி வெளியாகிறது. பிக்சர் பாக்ஸ் கம்பெனியின் அலெக்சாண்டர் வெளியிடுகிறார்.

அவர் கூறும்போது, “இது போன்ற மக்களின் வாழ்க்கையை பேசும் கதையைக் கொண்ட படங்கள் வருவது அரிது. படத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை பார்வையாளர்களை கவர்வதற்குத் தேவையான அனைத்து அம்சங்களும் இதில் இருக்கிறது” என்றார்.

SCROLL FOR NEXT