தமிழ் சினிமா

குழந்தைக்கு அம்மாவாக நடிக்க தமிழ் நடிகைகள் தயக்கம்: ‘ஒன் டு ஒன்’ இயக்குநர் வருத்தம்

செய்திப்பிரிவு

சுந்தர்.சி, அனுராக் காஷ்யப் நடித்துள்ள படம், ‘ஒன் டு ஒன்’. நீது சந்திரா, ராகினி திவேதி, விஜய் வர்மன், மானஸ்வி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திருஞானம் இயக்கியுள்ளார். இவர் த்ரிஷா நடித்த ‘பரமபதம் விளையாட்டு’ படத்தை இயக்கியவர். சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். 24 ஹவர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. படம்பற்றி இயக்குநர் திருஞானம் கூறியதாவது:

சென்னையில் நடக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் கதை. வங்கி அதிகாரியாக சுந்தர்.சியும் அவர் மனைவியாக ராகினியும் நடிக்கின்றனர். வில்லனாக அனுராக் காஷ்யப் நடிக்கிறார். சுந்தர்.சியை விட அனுராக் காஷ்யப்புக்கு சிறப்பான கேரக்டர். கதையை படித்த சுந்தர்.சி, வில்லன் கேர்கடர் சிறப்பாக இருக்கிறது. என்னைவிட அவர் கேரக்டருக்கு இன்னும் சில காட்சிகள் சேருங்கள் என்றார்.

இரண்டு பேருமே இயக்குநர்கள் என்பதால் படமாக்குவது எளிதாக இருந்தது. அனுராக், வசனங்களை இந்தியில் எழுதி வைத்துகொண்டு மிகச்சரியான உச்சரிப்புடன் பேசினார். நான்கு ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கின்றன. அனைத்தும் மிரட்டுவதாக இருக்கும். படத்துக்கு ‘ஒத்தைக்கு ஒத்த’ என்று தலைப்பு வைக்க நினைத்தேன். அதை வேறு நிறுவனம் வைத்துள்ளதால், ‘ஒன் டு ஒன்’ என்று வைத்துள்ளோம். படம் முடிந்துவிட்டது. ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம். குழந்தைக்கு அம்மாவாக நடிக்க தமிழ் நடிகைகள் தயங்குகிறார்கள். அதனால், ராகினி திவேதியை ஒப்பந்தம் செய்தோம். இவ்வாறு இயக்குநர் திருஞானம் கூறினார்.

SCROLL FOR NEXT