தமிழ் சினிமா

எனக்குள் ஒருவன் ஆகிறது லூசியா

செய்திப்பிரிவு

லூசியா திரைப்படத்தின் தமிழ் பதிப்பிற்கு, எனக்குள் ஒருவன் என்ற தலைப்பு இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் நாயகனாக சித்தார்த், நாயகியாக புதுமுக நடிகை தீபா சன்னிதி ஆகியோர் நடித்து வருகின்றனர். உளவியல் சார்ந்த த்ரில்லர் படமான லூசியாவில் பிராசாத் ராமர் இயக்குநராக அறிமுகமாகிறார். தற்போது இந்தப் படத்தின் தலைப்பு 'எனக்குள் ஒருவன்' என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு கன்னடத்தில் வெளிவந்து பலரது கவனத்தையும், பாராட்டையும் பெற்ற திரைப்படம் 'லூசியா'. 110 நபர்களின் நிதியுதவியுடன் தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படம், வியாபார ரீதியாகவும் வெற்றி கண்டது. க்ரௌட் ஃபண்டிங் (crowd funding) என்ற முறையையும் தென்னிந்தியா சினிமாவில் அறிமுகம் செய்தது. முன்னதாக இதன் தமிழ் ரீமேக் உரிமையை அட்டகத்தி, பிட்சா, சூதுகவ்வும் போன்ற வித்தியாச படைப்புகளை தயாரித்த சிவி குமார் வாங்கினார்.

ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில், கவிதாலயா நிறுவனம் தயாரித்த படம் எனக்குள் ஒருவன். கவிதாலயாவின் அதிகாரப்பூர்வ ஒப்புதலோடு இந்தத் தலைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது என எனக்குள் ஒருவன் தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT