சினிமா தான் என் வாழ்க்கை. எதிர்வரும் காலங்களில் நான் திருமணம் செய்துக் கொள்ளப் போவதில்லை என்று நடிகை லட்சுமி மேனன் தெரிவித்துள்ளார்.
'சுந்தரபாண்டியன்', 'கும்கி', 'பாண்டியநாடு', 'நான் சிகப்பு மனிதன்', 'மஞ்சப்பை', 'ஜிகர்தண்டா' உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தவர் லட்சுமி மேனன். தமிழ் திரையுலகில் பக்கத்து வீட்டு பெண் போலவே இருக்கிறார் என்று பெயர் வாங்கியவர்.
தற்போது சிப்பாய், கொம்பன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் எப்போது திருமணம்? என்ற கேள்விக்கு இவர் அளித்துள்ள பதில் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
"சினிமாதான் என் வாழ்க்கை. கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்வில் முன்னேறிய பெண்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள்தான் என் இன்ஸ்பிரேஷன். எதிர்வரும் காலங்களில் நான் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை” என்று கூறியுள்ளார் லட்சுமி மேனன்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா இவர்களுடன் இணைந்து நடிப்பதே எனது அடுத்த லட்சியம் என்றும் அப்பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.