தமிழ் சினிமா

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படமாகிறது!

செய்திப்பிரிவு

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க இருக்கின்றனர்.

இலங்கையில் தமிழ் ஈழம் அமையப் பாடுபட்டவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன். கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை அரசால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க இருக்கின்றனர். ‘நீலம்’, ‘உனக்குள் நான்’, ‘லைட் மேன்’ ஆகிய படங்களை இயக்கிய ஜி.வெங்கடேஷ் குமார் இந்தப் படத்தை இயக்குகிறார்.

தன்னுடைய ஸ்டுடியோ 18 நிறுவனத்தின் மூலம் வெங்கடேஷ் குமாரே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். படத்தில் நடிக்கும் நடிகர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட்டு, படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

SCROLL FOR NEXT